ஹோம் /கோயம்புத்தூர் /

துணிவு படம் எப்படி இருக்கு..? கோவை ரசிகர்கள் கருத்து...

துணிவு படம் எப்படி இருக்கு..? கோவை ரசிகர்கள் கருத்து...

X
ரசிகர்கள்

ரசிகர்கள் கருத்து

Thunivu Movie Review | கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு நடிகர் நடித்த துணிவு படம் வெளியானது. ரசிகர்களுக்காக திரையிடப்பட்ட இந்த காட்சியை நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் பார்த்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

ரசிகர்களால் 'தல' என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமாரின் துணிவு படம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் குமாரை வைத்து வலிமை படத்தை இயக்கிய இயக்குநர் வினோத் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இதே நேரத்தில் நடிகர் விஜயின் வாரிசுதிரைப்படமும் வெளியாகியுள்ளது. இதனால் இரு படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோவையில் பல்வேறு திரையரங்குகளிலும் துணிவு, வாரிசு ஆகிய இரு படங்களும் வெளியாகியுள்ளன. இதனால் திரையரங்குகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு நடிகர் நடித்த துணிவு படம் வெளியானது. ரசிகர்களுக்காக திரையிடப்பட்ட இந்த காட்சியை நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் பார்த்தனர்.

திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியதாவது:

வலிமை படத்தை விட இந்த படம் சிறப்பாக தயாரிக்கப்பட்டு வெளி வந்துள்ளது. வங்கிகள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதை மையமாக வைத்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும். இந்த படத்தில் 'பைக் ஸ்டண்டுகள்' இல்லை. சண்டை காட்சிகள் உள்ளன. இரண்டு பாடல்கள் மட்டுமே படத்தில் உள்ளது. பொங்கலுக்கு துணிவு வெற்றி படமாக இருக்கும்” எனரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Actor Ajith, Ajith, Cinema, Coimbatore, Local News, Thunivu