கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின்சாரம் தேவையில்லாத களி மண்ணால் செய்யப்பட்ட இயற்கை குளிர்சாதன பெட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்கள் மனதில் ஆழமாக பதிந்து வருகிறது. இதன் விளைவாக சுத்தமற்ற மற்றும் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் இயற்கை உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனிடையே கோவையில் களிமண்ணால் செய்யப்பட்ட மின்சாரம் இல்லாத குளிர்சாதன பெட்டியை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
புதிய கண்டுபிடிப்பு
மின்சாரம் இல்லாமல் இயற்கையான பழங்கால வாழ்வியல் முறையை பின்பற்றி மக்கள் நோய்கள் இல்லாமல் வாழ வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு குஜராத் மாநிலத்தை சேர்ந்த மன்சுக்பாய் பிரஜபதி என்பவர் களிமண்ணால் குளிர்சாதன பெட்டியை தயாரித்தார். மிட்டி கூல் என்ற இந்த குளிர்சாதன பெட்டி மின்சாரம் இல்லாமல் உணவுப் பொருட்களை குளு குளுவென வைக்கிறது. நாடுகளில் உள்ள கிராமப்புற சமூகங்களுக்கு மலிவு விலையில் குளிரூட்டும் இயந்திரமாக இது உள்ளது.
எப்படி செயல்படுகிறது?
நீரின் ஆவியாதல் மூலம் மட்டுமே இதில் உள்ள பொருட்கள் குளிர்விக்கப்படுகின்றன. இந்த குளிர்சாதன பெட்டியில் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, உணவு, காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை இயற்கையாகவே பல நாட்கள் கெடாமல் வைத்திருக்க முடியும் என்கின்றனர். குளிர்சாதன பெட்டி வெள்ளை களிமண்ணால் ஆனது மற்றும் வழக்கமான பராமரிப்பு தேவையில்லை. மின்சாரம் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில், களிமண் குளிர்சாதன பெட்டி நம்பகமான குளிரூட்டும் வசதியை கொடுக்கிறது.
இந்நிலையில், கோவை கணபதி பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கனகராஜ் இயற்கை சார்ந்த களிமண் பொருட்களை தனது சிறு வயதில் இருந்து செய்து மலிவு விலையில் கொடுத்து வருகிறார். தற்போது இந்த குளிர்சாதன பெட்டியையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த குளிர்சாதன பெட்டியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
விலை எவ்வளவு?
இதுகுறித்து கனகராஜ் கூறுகையில், “இந்த குளிர்சாதன பெட்டியில் தினமும் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் காய்கறிகள், பழங்கள், பால், குளிர்பானங்கள், உள்ளிட்ட பொருட்களை 'சில்லென' வைத்து கொள்ள முடியும். இதனுள் வைக்கப்படும் காய்கறிகள் பழங்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை மற்றும் உணவுப் பொருட்கள் ஒன்று முதல் 2 நாட்கள் வரை கெடாமல் சுவை மாறாமல் இருக்கும்” என்று தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இதற்கு பராமரிப்பு செலவு இல்லை என்றும், மின்சார குளிர்சாதன பெட்டியை விட பல மடங்கு ஆரோக்கியமானது என்றும் கனகராஜ் தெரிவித்தார். தற்போது ஒரு களிமண் குளிர்சாதன பெட்டியின் விலை 8 ஆயிரத்து 500ல் இருந்து விற்பனை செய்யப்படுவதாகவும், உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார் கனகராஜ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News