Home /coimbatore /

கோவையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் - அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

கோவையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் - அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

கோவையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

கோவையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

கோவையில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் உடனடியாக இந்த தப்பிக்கும் வழிமுறைகளை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவையில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் உடனடியாக தற்காத்து கொள்ள வழிமுறைகளை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் என்று கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

    கோவையில் வேகமாக வைரஸ் காய்ச்சலால் பரவி வருகிறது மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பள்ளி குழந்தைகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் பலரும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தனியார் மருத்துவமனைகளிலும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் காய்ச்சல் பாதிப்புக்கு 62 குழந்தைகள் உள்நோயாளிகளாகவும் 739 பேர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இந்த மாதம் 407 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது சிறியவர், பெரியவர் என 30 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளதாவது:-

    தற்போது வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் அச்சப்படும் அளவுக்கு நோயாளிகள் வரத்து இல்லை. காய்ச்சல், உடல்வலி, சோர்வு, தொண்டைவலி போன்றவை ஏற்படுகிறது. பொதுமக்கள், குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    Also Read : 1971 பேட்ச்.. ஞாபகம் வருதே... 50 ஆண்டுகளுக்கு பின் இணைந்த பள்ளி நண்பர்கள்.. கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்..

    சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட துணை வியாதிகள் உள்ளவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வைட்டமின் சி, புரோட்டீன் அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    40 படுக்கை வசதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புக்காக வரும் குழந்தைகளை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் 40 படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காட்டி சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம் என:று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி