முகப்பு /கோயம்புத்தூர் /

வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் வெடிப்பதற்கு இதுதான் காரணம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோவை மெக்கானிக் விளக்கம்..

வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் வெடிப்பதற்கு இதுதான் காரணம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோவை மெக்கானிக் விளக்கம்..

X
மாதிரி

மாதிரி படம்

Reasons For Fridge Exploding | வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் வெடிப்பதற்கான காரணங்கள் குறித்து கோவையை சேர்ந்த மெக்கானிக் விளக்குகிறார்.

  • Last Updated :
  • Coimbatore, India

நாம் ஒவ்வொருவரது வீடுகளிலும் உள்ள அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது குளிர்சாதனப் பெட்டிகள். அதுவும் கோடை காலங்களில் வீட்டிற்கு சென்றவுடன் குளிர்சாதன பெட்டியை தேடி ஓடி சிறுது நீரை எடுத்து பருகி பெருமூச்சு விடுபவர்கள் அதிகம். இத்தகைய குளிர்சாதன பெட்டிகள் சில குடும்பங்களுக்கு எமனாக மாறியுள்ளன.

கடந்த வாரம் பொள்ளாச்சியில் குளிர்சாதன பெட்டி வெடித்ததில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன் திடீரென குளிர்சாதன பெட்டிகள் வெடிக்கின்றன? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து கோவையைச் சேர்ந்த ஃப்ரிட்ஜ் மெக்கானிக் பாலாஜியிடம் கேட்டோம்.

அதற்கு அவர் கூறியதாவது, “நான் இந்த தொழிலில் 25 வருடங்களாக உள்ளேன். இன்றைய காலத்தில் இன்வெர்டர் டெக்னாலஜி என்ற குளிர்சாதன பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் தற்போது இந்த தொழில் நுட்பத்தைத் தான் பயன்படுத்து வருகிறோம். ஃப்ரிட்ஜ் இயங்குவதற்கு சமையல் கியாஸ் உபயோகிக்கப்படுகிறது. 80 சதவீதம் இந்த சமையல் கியாஸ் வைத்து தான் ஃப்ரிட்ஜ் இயங்குகிறது.

குளிர்சாதன பெட்டியின் பின்புறம் கீழ் பகுதியில் உள்ள கம்பிரசரில் இந்த கியாஸ் நிரப்பப்பட்டிருக்கும். இந்த கம்பிரசர் அதிகமாக அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் வெளியூர்களுக்கு செல்லும்போது ஃப்ரிட்ஜ்-ஐ ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது. அவ்வப்போது கம்பிரசர் சூடாகியுள்ளதா? என்பதை சோதிக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் உள்ள ப்ரீசர் பகுதியில் அதிக பொருட்களை வைக்கக்கூடாது. இதனால் கம்பிரசர் அதிகமாக சூடாக வாய்ப்புள்ளது. இதனாலும் ஃப்ரிட்ஜ் வெடிக்கலாம்” என்று கூறினார்.

First published:

Tags: Coimbatore, Local News