முகப்பு /கோயம்புத்தூர் /

பஸ் டிக்கெட் ரூ.5 தான்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கோவை தனியார் பஸ் நிறுவனம்..

பஸ் டிக்கெட் ரூ.5 தான்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கோவை தனியார் பஸ் நிறுவனம்..

X
5

5 ரூபாய் கோவை பஸ்

5 Rupees Bus in Coimbatore : கோவையில் தனியார் பேருந்து 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபலமாகும் 5 ரூபாய் பஸ் குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

அரசு பேருந்துகளில் பயணம் செய்ய பெண்களுக்கு இலவசம், முதியவர்களுக்கு இலவசம், 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டாம், 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுத்தால் போதும் என்று பல சலுகைகளை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அரசு மட்டும் தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமா என்ன? எங்களால் முடிந்ததை நாங்களும் செய்கிறோம். என்று களத்தில் இறங்கியுள்ளனர் தனியார் பேருந்து நிர்வாகத்தினர். கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்படுகிறது. பள்ளிக்குச் செல்ல பெரும்பாலான மாணவர்கள் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இதனால் மாணவர்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். மேலும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் கூட்டத்தை காண முடிவதில்லை பள்ளிகள் அடுத்த வாரம் திறக்க உள்ள நிலையில் கோவை கந்தே கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழியாக இயக்கப்படும் தனியார் பேருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்க 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

கோவை தனியார் பேருந்து

இதையும் படிங்க : மதுரையில் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா? - புகார் தெரிவிக்க இந்த எண்களை அழைங்க..!

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் கூறுகையில், “கந்தே கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழித்தடத்தில் ஏராளமான தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பள்ளி நேரத்தில் எங்கள் பேருந்து தான் இயக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் பயன்பெறும் வகையில் எங்கள் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News