ஹோம் /கோயம்புத்தூர் /

டாப்சிலிப்..கோழிகமுக்தி யானைகள் முகாம்.. பொள்ளாச்சியில் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்கள்

டாப்சிலிப்..கோழிகமுக்தி யானைகள் முகாம்.. பொள்ளாச்சியில் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்கள்

டாப்சிலிப்

டாப்சிலிப்

Coimbatore News : பொள்ளாச்சி சுற்றுலாவுக்கு சென்றால் ஆனைமலை ஒட்டியுள்ள டாப்சிலிப்பை தேர்வு செய்துவிட்டு அழகாக அங்கே தங்கியும் சுற்றுலா இடங்களை ரசிக்கலாம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சி அடர் வனப்பகுதிக்கு நீங்கள் சுற்றுலா போக ஆசைப்பட்டால், கட்டாயம் இந்த ஆனைமலை ஒட்டியுள்ள டாப்சிலிப்பை தேர்வு செய்துவிட்டு அழகாக அங்கே தங்கியும் சுற்றுலா இடங்களை ரசிக்கலாம். இல்லை என்றால், ஒரே நாளில் கூட திரும்பிவிடலாம். இதற்கு நீங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் முன்பே அனுமதி பெற்றுத்தான் செல்லவேண்டும். இது ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்டது.

டாப்சிலிப்பை அடுத்து ஒட்டுமொத்த பொள்ளாச்சியின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் அம்புளி கண்காணிப்பு கோபுரத்து சென்று வரலாம். இது யானை வழித்தடங்களை கொண்ட பாதையாக செல்கிறது. இங்கு தாவரங்கள், விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன.

டாப்சிலிப் விளக்க மையத்தில் பல்லுயிர் மற்றும் காடுகள் பெருக்கம் இருக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பழங்குடியினர் தயாரித்த மதிய உணவு வழங்கப்படும். மேலும் பழங்குடியினத்தவரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் கண்டு கழிக்கலாம்.

பிறகு, நீங்கள் ஆங்கிலேய வனத்துறை அதிகாரி 'ஹ்யூகோ வுட்டின்' கல்லறைக்கும் செல்லாம். இந்த இடத்தில் தேக்கு மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இவர் வனஅதிகாரியாக இருந்த தனது சட்டை பையில் வைத்து தேக்கு மரங்களை நட்டு வைத்து வளர்தார்.

இறுதியாக கோழிகமுக்தி யானைகள் முகாமில் சென்றும் பார்வையிட்டு வரலாம். யானைகளுக்கு நீங்கள் உணவும் வழங்கியும் விளையாடியும் வரலாம். இங்குள்ள தங்கும் விடுதிகளிலும் நீங்கள் தங்கலாம். இங்கு வர பொள்ளாச்சியில் இருந்து நான்கு சக்கர வாகனங்களில் வர மட்டுமே அனுமதி.

மேலும், முன்பே வனத்துறை அதிகாரிகளின் அலுவலகம் அல்லது இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்கும் இடம் மற்றும் உணவுக்கும் சேர்த்து ரூ.1000 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு, 88832-26662, 89037-08240, 94438-57838 என்ற எண்களை தொடர்புக்கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

First published:

Tags: Coimbatore, Local News, Pollachi, Tamil News