முகப்பு /கோயம்புத்தூர் /

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்! - கோவையில் பரபரப்பு

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்! - கோவையில் பரபரப்பு

சாலை மறியல் 

சாலை மறியல் 

Coimbatore News| கடந்த 20 நாட்களாக  குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி புலியகுளம் பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி புலியகுளம் பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி 66 வது வார்டில் புலியகுளம் அமைந்துள்ளது. இங்கு காந்த சாமி வீதி , சின்ன மருதாச்சல வீதி, ஆறுமுகசாமி வீதி , சந்தியாகு வீதி, ரெட் பீல்ட் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 20 நாட்களாக குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை.

குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனலும், குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனை அடுத்து உடனடியாக தண்ணீர் விடக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் புலியகுளம் விநாயகர் கோயில் சாலையில் திரண்டனர். மேலும், உடனடியாக தண்ணீர் வழங்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உடனடியாக குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Coimbatore, Local News