ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை டாப்சிலிப்பில் யானைகளுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் மாயம்..

கோவை டாப்சிலிப்பில் யானைகளுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் மாயம்..

X
கோவை

கோவை டாப்சிலிப்

Coimbatore District News : யானைகளுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் மண்ணோடு மண்ணாகிப்போனது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து அமைந்துள்ளது டாப்சிலிப். சுற்றுலாத்தலமான இந்த பகுதியில் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது.

காடுகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகளை பிடிக்கும் வனத்துறையினர் இந்த டாப்சிலிப் யானைகள் முகாமில் அவற்றை பராமரிக்கின்றனர். அவற்றிற்கு உணவும் இந்த முகாமில் வழங்கப்பட்டு வருகிறது.

டாப்சிலிப் அமைந்துள்ள இடம் வனப்பகுதி என்பதால் இங்கு வளர்ப்பு யானைகளை கடந்து பல்வேறு வன உயிர்களும் காட்டு யானைகளும் வசிக்கின்றன. கோடை காலங்களில் இந்த யானைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருவதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து டாப்சிலிப் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த தண்ணீர் தொட்டியில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்புவார்கள். காட்டு யானைகள் உட்பட வன விலங்குகள் இங்கு தண்ணீர் அருந்தி வந்தன.

இதையும் படிங்க : Coimbatore News : ''லொல்.. லொல்.." தொல்லைக்கு கோவையில் போட்டாச்சு தடை!

இந்த தண்ணீர் தொட்டிகள் முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது தண்ணீர் தொட்டிகள் இருந்த தடமே இல்லாமல் மண் மூடி, அதில் செடிகள் முளைத்துள்ளன.

இதனால் தண்ணீரை தேடி மீண்டும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாக தண்ணீர் தொட்டிகளை புனரமைத்து அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News