ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை கொடிசியாவில் மூன்று தினங்களுக்கு ரியல் எஸ்டேட் கண்காட்சி

கோவை கொடிசியாவில் மூன்று தினங்களுக்கு ரியல் எஸ்டேட் கண்காட்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை கொடிசியா மைதானத்தில் ரியல் எஸ்டேட் சங்கம் சார்பில் கண்காட்சி நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவையில் ரியல் எஸ்டேட் கண்காட்சி ஜூலை 29ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்க கூட்டமைப்பு (கிரெடாய்) சாா்பில் நடைபெறவுள்ளது.

  அந்த அமைப்பின் தலைவா் குகன் இளங்கோ, செயலா் ராஜீவ் ராமசாமி, கண்காட்சித் தலைவா் சுரேந்தா் விட்டல், பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளா் இன்பரசு ஆகியோா் தெரிவித்ததாவது, ‘12வது முறையாக கிரெடாய் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் 3 நாள்கள் நடக்கிறது. நாளை (ஜூலை 29ஆம் தேதி) துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.

  இந்த கண்காட்சியில், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் ஹாலிடே வில்லாக்கள், கேட்டட் கம்யூனிட்டிட்கள், வீட்டு மனைகள், முதியோருக்கான இல்லங்கள் வரையிலான எல்லாத் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் வழங்கப்படுகின்றன.

  கண்காட்சியானது தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. 5 வங்கிகள், பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையாளா்கள் பங்கேற்கின்றனா்.

  இந்த கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பா்கள், 75க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Coimbatore, Local News