முகப்பு /கோயம்புத்தூர் /

”வரி செலுத்தாதவர்கள் பெயர்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” - கோவை மாநகராட்சி எச்சரிக்கை!

”வரி செலுத்தாதவர்கள் பெயர்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” - கோவை மாநகராட்சி எச்சரிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore News | கோவை மாநகராட்சியில் அதிக வரி நிலுவைத்தொகை வைத்திருப்பவர்கள் பெயர் பட்டியல் தினசரி நாளிதழ்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என்று எச்சரித்து  மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் அமைந்துள்ளன. இந்த 100 வார்டுகளிலும் சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி மற்றும் குடிநீர் வரி போன்ற வரியினங்கள் தீவிரமாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மண்டல வாரியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒவ்வொரு வீதிகளுக்கும் சென்று கராராக வரி வசூலிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நடப்பு நிதியாண்டில் 344 கோடி ரூபாய் வரி வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில். கடந்த டிசம்பர் மாதம் வரை 151 கோடி ரூபாய் வரி வசூலித்துள்ளது கோவை மாநகராட்சி. தமிழகத்தில் வரி வசூலில் இரண்டாவது இடத்தில் உள்ள கோவை மாநகராட்சியில் தினமும் 1 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில் சொத்து வரி மட்டுமே 50 முதல் 60 சதவீதம் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ஏழ்மை, வேலையின்மை, தொழில் நலிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அதிகாரிகள் வீடுகளுக்கு வந்து கேள்வியெழுப்பி, குடிநீர் இணைப்பை துண்டிப்பதாகக் கூறுவதால் கடனை வாங்கி வரியை செலுத்தி வருகின்றனர். இதனிடையே அதிகமாக வரி நிலுவைத்தொகை வைத்திருப்பவர்கள் பெயர் பட்டியல் தினசரி நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என எச்சரித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையின் புதிய நடைமுறைகள்.. வரவேற்கும் கோவை மக்கள்..

அந்த அறிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் அதிக தொகை நிலுவை வைத்துள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தவறும்பட்சத்தில் அதிகமான நிலுவை தொகை வைத்துள்ள நபர்களின் பெயர், நிலுவைத் தொகை உள்ளிட்ட விபரங்கள் தினசரி நாளிதழ்களிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படும் என்பதை இறுதியாக அறிவிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மட்டுமே முறையாக நடைபெற்று வந்த சூழலில், கடந்த சில மாதங்களாக அந்த பணியும் நடைபெறவில்லை என்றும், வறுமையில் தவிக்கும் மக்களை பொதுவெளியில் சுட்டிக்காட்டும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருப்பது மக்களை அச்சுறுத்தும் செயலாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News