ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை | காந்திபுரத்தில் அதிரடியாக ஆக்கிரப்புகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம்

கோவை | காந்திபுரத்தில் அதிரடியாக ஆக்கிரப்புகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம்

X
கடைகள்

கடைகள் இடிப்பு

Coimbatore | கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரப்புகளை கடைகளை அகற்றினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை காந்திபுரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் விளம்பர பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர்.

கோவை மாநகரில் காந்திபுரம் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான துணிக்கடைகள், நகை கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளன.

மேலும் வெளியூர் பேருந்து நிலையம் மற்றும் உள்ளூர் பேருந்து நிலையமும் அமைந்துள்ளன. இதனால் காந்திபுரம் பகுதி எப்பொழுதும் மக்கள் நெரிசலுடன் இருக்கும்.

இடிக்கப்படும் கடைகள்

இந்த சூழலில் காந்திபுரம் கிராஸ்கட் சாலை பகுதியில் உள்ள நான்கு மற்றும் ஐந்தாவது வீதிகளில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதாகவும் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்து.

இந்த சூழலில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த நோட்டீசை கருத்தில் கொள்ளாமல் வியாபாரிகள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்து வந்தனர்.

இதனிடையே அந்தப் பகுதிக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் விளம்பர பலகைகளை அதிரடியாக இடித்து அகற்றினர்.

7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை.. கோவை பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களுடன் அப்பகுதி வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Coimbatore, Local News