முகப்பு /கோயம்புத்தூர் /

உதவி செய்வதற்கு மனம் போதும்.. குறைந்த வருவாயிலும் கோவை மக்களுக்கு உதவும் சேவகர்..!

உதவி செய்வதற்கு மனம் போதும்.. குறைந்த வருவாயிலும் கோவை மக்களுக்கு உதவும் சேவகர்..!

X
மக்களுக்கு

மக்களுக்கு உதவும் சேவகர்

Coimbatore News | தன் உழைப்பில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஏழை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற மக்களுக்கும் உதவிகளை செய்து வருகிறார் கோவை சமூக ஆர்வலர் நபாஸ் செரிப்.

  • Last Updated :
  • Coimbatore, India

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால், பணம், நேரம் இல்லாவிட்டாலும் எப்படியாவது அவருக்கு உதவி விட முடியும். அப்படி தன் உழைப்பில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஏழை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற மக்களுக்கும் உதவிகளை செய்து வருகிறார் நபாஸ் செரிப்.

கோவையை சேர்ந்தவர் நபாஸ் செரிப். தந்தை ஊதுபத்தி வியாபாரம் செய்து தான் நபாஸை பி.எஸ்.சி படிக்க வைத்துள்ளார். வறுமையில் கல்வி பயின்ற இவர், சம்பாதிக்கும் போது தன்னைப்போல் வறுமையில் வாடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை கொண்டிருக்கிறார்.

மக்களுக்கு உதவும் சேவகர்

இப்போது ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நபாஸ் செரிப்புக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தனது நிறுவனத்தின் மூலமாக மாதந்தோறும் சில ஆயிரங்களை ஈட்டி வரும் நபாஸ், கிடைக்கும் வருவாயில் 20 சதவீதத்தை தானமாக வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதனை செயல்படுத்தியும் வருகிறார்.

இதையும் படிங்க : ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை தெரியுமா? - முழு தகவல் இதோ!

மக்களுக்கு உதவுவதற்காக இஹ்வான் என்கிற அறக்கட்டளையை துவங்கி தனது நண்பர்கள் மூலம் சேவையாற்றி வருகிறார். நமக்கு நாமே என்ற மாத பத்திரிகை மூலமாக மக்கள் பிரச்சனைகளை எழுதி வரும் இவர் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். உதவிகள் மட்டுமல்லாது பள்ளி கல்லூரி மாணவர்களை ஊக்கமூட்டும் வகையிலான பேச்சாளராகவும் உள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இளைஞர்கள் அரசியலில் பிரவேசித்தால் மக்களுக்கு அதிகம் உதவமுடியும் என்று நினைத்த இவர் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவையில் சிங்காநல்லூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். களம் கண்ட சுயேட்சை வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளையும் பெற்றார். ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அதனை ஏழை மக்களுக்காக முற்றிலும் இலவசமாக இயக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் நபாஸ் செரிப்.

"வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து" என்ற வள்ளுவத்தை போல் பிரதிபலனை எதிர்பாராது உதவும் இவர் போன்றவர்களை பாராட்டி பெருமை கொள்கிறது நியூஸ் 18 உள்ளூர் செய்தித் தளம்.

First published:

Tags: Coimbatore, Local News