முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் பைக்கில் புகுந்த கட்டு விரியன் பாம்பு.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்...!

கோவையில் பைக்கில் புகுந்த கட்டு விரியன் பாம்பு.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்...!

கட்டு விரியன் பாம்பு

கட்டு விரியன் பாம்பு

coimbatore | கோவையில் பரபரப்பான சாலையின் பைக் பார்க்கிங்கில் கட்டு விரியன் பாம்பு புகுந்தது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை பந்தய சாலையில் உள்ள துணிக்கடை பார்க்கிங்கில் வாடிக்கையாளரின் வாகனத்திற்குள் கட்டு விரியன் பாம்பு புகுந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி  பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவவர் மதன். இவர் பந்தய சாலையில் இருக்கின்ற  துணி கடைக்கு ஆடைகளை வாங்கிவிட்டு திரும்பும் போது,  பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு புகுந்ததை அவர் பார்த்துள்ளார். உடனே  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... கோவையில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு.. விசாரணையில் போலீசார்

top videos

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்  மற்றும் மீட்பு படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி இருசக்கர வாகனத்தின் இடுக்குகளுக்குள் மறைந்திருந்த பாம்பை பத்திரமாக மீட்டு சென்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மிகவும் விஷத்தன்மை உள்ள பாம்பு புகுந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    First published:

    Tags: Coimbatore, Fire, Snake