முகப்பு /கோயம்புத்தூர் /

"வட மாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தை பாதுகாப்போம்" மகள் எழுதிய கவிதையுடன் கோவை ஆட்சியரிடம் வந்த தந்தை..!

"வட மாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தை பாதுகாப்போம்" மகள் எழுதிய கவிதையுடன் கோவை ஆட்சியரிடம் வந்த தந்தை..!

X
மாணவி

மாணவி எழுதிய கவிதை

Coimbatore | "வட இந்தியர்களிடமிருந்து தமிழகத்தை காக்க வேண்டும்" என்று பள்ளியில் படிக்கும் தனது மகள் எழுதிய கவிதையுடன் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற கட்டிடத் தொழிலாளி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

வட இந்தியர்களிடமிருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என்று தனது மகள் எழுதிய கடிதத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தந்தை ஒருவர் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

தமிழகத்தில் வட இந்தியர்கள் அதிகமாக வேலைக்கு வருவதாகவும் இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் சமீபத்தில் திருப்பூரில் வட இந்தியர்களுக்கும், தமிழக இளைஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது தமிழகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஊதியம் குறைவு என்பதற்காக தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்களை நியமிக்கக்கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். இதனிடையே "வட இந்தியர்களிடமிருந்து தமிழகத்தை காக்க வேண்டும்" என்று பள்ளியில் படிக்கும் தனது மகள் எழுதிய கவிதையுடன் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற கட்டிடத் தொழிலாளி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

இதுகுறித்து பாலமுருகன் கூறுகையில், சமீபத்தில் திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழக வாலிபரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை விட வட மாநில தொழிலாளிகள் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்ப்பதனால் பெரும்பாலான முதலாளிகளால் வட மாநிலத்தவரை பணியில் அமர்த்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இது அடுத்த தலைமுறையை பாதிக்கும்  என்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது மகள் எழுதிய கவிதையுடன் மனு அளித்தார். அந்த கவிதை மனுவில், பேனா, பென்சிலுக்கு சண்டையிடும் அரசியல்வாதிகளுக்கும், விஜயா, அஜித்தா என சண்டையிடும் ரசிகர் பெருமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள். அழிந்து வரும் தமிழகத்தையும், எனது தமிழ் மண்ணையும் மீட்டெடுப்போம் . வட இந்தியர்களிடமிருந்து என்னைப் போன்றவர்களையும், நமது வருங்காலத்தையும் போற்றி பாதுகாப்போம், போராடுவோம் தமிழகத்தை மீட்கும் வரை . இப்படிக்கு தமிழனின் ஒருவர் தமிழ் மதி. என்று அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, District collectors, Local News