ஹோம் /கோயம்புத்தூர் /

ஆர்ட் ஸ்ட்ரீட்டாக மாறிய ரேஸ் கோர்ஸ்.. கோவை மக்களை ஈர்க்கும் கண்கவர் ஓவியங்கள்!

ஆர்ட் ஸ்ட்ரீட்டாக மாறிய ரேஸ் கோர்ஸ்.. கோவை மக்களை ஈர்க்கும் கண்கவர் ஓவியங்கள்!

X
ஆர்ட்

ஆர்ட் ஸ்ட்ரீட்

Coimbatore Art street | கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார். இதில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவை விழாவின் ஒரு பகுதியாக கலை தெரு எனப்படும் ஆர்ட் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

ஜனவரி 2ம் தேதி முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் கோவை விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாள் தோறும் பல்வேறு கேளிக்கை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்தாண்டு கோவை விழாவில், வேளாண் திருவிழா, செட்டிநாடு உணவுத்திருவிழா, வாலாங்குளம் பகுதியில் லேசர் விளக்குகளின் நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிலையில் கலை தெரு எனப்படும் ஆர்ட் ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.

இதில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தினர். நடைபாதையில் பல்வேறு கலைப்படைப்புகள்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக 1,500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் தங்கள் கனவு வாழ்க்கை குறித்த ஓவியங்களை அஞ்சல் அட்டையில் வரைந்து அதனை காட்சிப்படுத்தினர். இதற்கு கனவுகளின் வானவில் என்று பெயரிடப்பட்டது.

மேலும், தெய்வீக மற்றும் புராணங்கள் தொடர்பான சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி கலை போன்ற பல்வேறு வகையான கலைகள், வரலாற்று ஓவியங்கள், தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆர்ட் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை கோவை மக்கள் பார்த்து ரசித்தனர்.

First published:

Tags: Coimbatore, Festival, Kovai, Local News