முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / படிப்பு முக்கியம் பிகிலு...! வகுப்பிற்கு வராத மாணவன் வீட்டிற்கே சென்ற ஆசிரியர்... நெகிழ்ச்சி சம்பவம்..!

படிப்பு முக்கியம் பிகிலு...! வகுப்பிற்கு வராத மாணவன் வீட்டிற்கே சென்ற ஆசிரியர்... நெகிழ்ச்சி சம்பவம்..!

ஆசிரியர்

ஆசிரியர்

சிறப்பு வகுப்பிற்கு வராத மாணவனை வீட்டிற்கே சென்று ஆசிரியர் அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பொதுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புக்குச் செல்லாமல் போக்கு காட்டிய அரசுப் பள்ளி மாணவரை, ஆசிரியரே வீடு தேடிச் சென்று அழைத்து வந்தது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பெத்தநாயக்கனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நல்ல தேர்ச்சி விகிதத்தைப் பெறும் நோக்கில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில், மாணவர் ஒருவர் சிறப்பு வகுப்புக்குச் செல்லாமல் தவிர்த்து வந்துள்ளார். இதை அறிந்த பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ராஜசேகர், அந்த மாணவரின் வீட்டிற்கே நேரில் சென்று அறிவுரை கூறி, போராடி அழைத்து வந்தார்.

Also Read : கோவை மக்களுக்கு குட்நியூஸ்.. தேசிய அளவில் பிச்சனூர் கிராமம் முதலிடம்!

அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவரின் நலனுக்கான எடுத்துக்கொண்ட முயற்சியை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர். பெத்தநாயக்கனூரில் உள்ள இந்த அரசு உயர் நிலைப் பள்ளி, கடந்த 2017-ம் ஆண்டு, தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதை வென்றுள்ளது.

top videos
    First published:

    Tags: Students, Tn schools