முகப்பு /கோயம்புத்தூர் /

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு கோவையில் 7 அடி உயரத்தில் சிலை..!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு கோவையில் 7 அடி உயரத்தில் சிலை..!

X
கோவையில்

கோவையில் அமைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் சிலை

v.o.Chidambaranar Statue in Kovai | வ.உ.சிதம்பரனாருக்கு கோவையில் 7 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளது தமிழக அரசு.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு  தமிழக அரசு 7 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளது.

சுதந்திரத்திற்காக போராடிய ஆயிரக்கணக்கான தியாகிகளுள் குறிப்பிடத்தக்கவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேயர்களை எதிர்த்து குற்றத்திற்காக இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நினைவு கூறும் விதமாகவே மத்திய சிறை மைதானத்திற்கு அருகில் உள்ள பூங்காவுக்கு வ.உ.சி பூங்கா என்று பெயரிடப்பட்டது. அருகில் உள்ள மைதானத்திற்கும் அவரது பெயரே சூட்டப்பட்டது.

கோவையில் அமைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் சிலை

இதனிடையே வ.உ.சி மைதானத்தில் அண்ணா சிலை சிக்னல் அருகில் சுமார் 2500 சதுர பரப்பளவில் வ.உ.சி.,க்கு சிலை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதற்காக ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 7 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும் வ.உ.சி மைதானத்திற்கு விடுமுறை தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். இந்த சூழலில், அங்கு சுதந்திர போராட்ட தியாகியின் சிலை அமைக்கப்படுவது இளம் தலைமுறையினருக்கு வ.உ.சிதம்பரனார் யார்? மக்கள் சுதந்திரத்திற்காக அவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பது குறித்து தெரிந்தது கொள்ளவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Coimbatore, Local News