கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட வணிக வளாகத்தை தமுமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தி மொழியில் இன்று திரையிடப்பட்டது. இதனையடுத்து மூன்று வணிக வளாகங்கள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், படம் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் தமுமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
Also Read : 6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்
இதனையடுத்து தமுமுகவினர் தங்கள் கைகளில் வைத்திருந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்தெறிந்த்துடன் திரைப்படத்தைத் திரையிட அனுமதித்த தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பினர்.
இந்த திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும் , இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema, Coimbatore