தமிழ்நாட்டில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதற்கு விதிகள் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், பைக் டாக்சிக்கு இதுவரை தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கோவை மண்டலத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணபலன்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று ஓய்வு பெற்ற 518 ஊழியர்களுக்கு, பணபலன்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து, கோவை மாநகரில் இயங்கும் 65 பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் குறித்த ஒலி அறிவிப்பு சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் பிறகு கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மண்டலங்களில் உள்ள பணிமனைகளில் ஒட்டுநர், நடத்துநர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், தனி நபர் பயன்படுத்தும் வாகனத்தை, வாடகைக்கு விடும் வாகனக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது எனவும், தமிழ்நாடு அரசு பைக் டாக்சியை இதுவரை ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார். விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Sivasankar, Rapido App