Home /coimbatore /

பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய கோவையைச் சேர்ந்த நடிகர்கள்

பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய கோவையைச் சேர்ந்த நடிகர்கள்

மணிவன்னண், சத்யராஜ், கவுண்டமணி

மணிவன்னண், சத்யராஜ், கவுண்டமணி

தமிழ் சினிமாவுக்கு எண்ணற்ற திரை நட்சத்திரங்களைக் கொடுத்த முக்கிய மாவட்டமாக கோயம்புத்தூர் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்ற கோவையை பூர்வீகமாக கொண்ட கொங்கு தமிழர்கள் குறித்து காணலாம். இவர்களால் கோவை மண்ணுக்கே பெருமை.

கவுண்டமணி

தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.

கவுண்டமணி


பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் மே 25, ஆம் தேதி கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

கோவை சரளா

ஏப்ரல் 7, 1962 பிறந்தார். முக்கியத் துணை வேடங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் நகைச்சுவை நடிகை. 30 ஆண்டுக்கும் மேலான திரைப்பட வாழ்க்கையில், கோவை சரளா 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கோவைசரளா


இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது ஆகியவற்றை முறையே பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காக வென்றுள்ளார்.

சிவகுமார்

கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், 'கம்ப இராமாயணம்' சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.

சிவகுமார்


நான்கு தலைமுறைகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. புகழ்பெற்ற நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் காக்கும் கரங்கள் (1965) திரைப்படத்தில் அறிமுகமானார்.

மணிவண்ணன்

கோவை சூலூரில் 31, 1953ம் ஆண்டு பிறந்தார். தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

மணிவண்ணன்


1979 ஆம் ஆண்டு பி. எஸ் நிவாஸ் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பாரதிராஜா நடித்து கொண்டிருக்கும் போது பாரதிராஜாவுடன் இணைந்தார்.

சத்யராஜ்

சத்யராஜ் சுப்பையன் 1954 அக்டோபர் 3, பிறந்தார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும்.

சத்யராஜ்


இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். வேதம் புதிது, வால்டர் வெற்றிவேல், மலபார் போலீஸ், பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

நந்தா துரைராஜ்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பூர்விகமாக கொண்டவர். நந்தா என்று பரவலாக அறியப்படும் நந்தா துரைராஜ் ஒரு தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் ஆவார்.

நந்தா


சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சங்கரின் தயாரிப்பில் வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.

சத்யன் (நகைச்சுவை நடிகர்)

கோயம்புத்தூர் செம்மேட்டை சேர்ந்தவர் சத்யன் சிவகுமார். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவர் 1999 -ல் இளையவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

சத்யன்


அதன் பிறகு இவர் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சத்யன் கோயம்புத்தூரில் தயாரிப்பாளர் சிவக்குமார் என்பவருக்கு மகனாக பிறந்தவர்.

சித்தார்த் வேணுகோபால்

சித்தார்த் வேணுகோபால் தமிழ் நடிகராவார். இவர் ஆனந்த தாண்டவம் (2009) திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சித்தார்த்


நான் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் துணை நடிகராக நடித்துள்ளார். சித்தார்த் வேணுகோபால் கோயம்புத்தூரில் நவம்பர் 28, 1985ல் பிறந்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி