முகப்பு /கோயம்புத்தூர் /

தாம்பூலத்திற்கு பதிலாக சிறுதானியங்களில் ஸ்வீட்ஸ்..! திருமணத்தில் அசத்திய கோவை ஜோடி..!

தாம்பூலத்திற்கு பதிலாக சிறுதானியங்களில் ஸ்வீட்ஸ்..! திருமணத்தில் அசத்திய கோவை ஜோடி..!

X
தாம்பூலத்திற்கு

தாம்பூலத்திற்கு பதிலாக சிறுதானியங்களில் ஸ்வீட்ஸ்

Coimbatore News | கோவையில் இந்து முறைப்பட நடைபெற்ற திருமணம் ஒன்றில் உறவினர்களுக்கு   வழங்கப்படும் தாம்பூல பைகளுக்கு பதிலாக சிறுதானியங்களில் செய்த இனிப்பு வகைகளை கொடுத்துள்ளனர் புது மணத்தம்பதியினர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் ஒன்றில் உறவினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூல பைகளுக்கு பதிலாக சிறுதானியங்களில் செய்த இனிப்பு வகைகளை கொடுத்துள்ளனர் புது மணத்தம்பதியினர்.

இந்துக்கள் திருமண விழாக்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு திரும்பும் போது தாம்பூல பை கொடுப்பது வழக்கம். இந்த தாம்பூல பையில் அவரவர் வசதிக்கு ஏற்ப வெற்றிலை-பாக்கு, தேங்காய், பூ, பழங்கள் வைத்துக் கொடுப்பது வழக்கம். வசதி படைத்தவர்கள் இந்த தாம்பூல பைகளில் பரிசு பொருட்களையும் வைத்து கொடுப்பார்கள்.

வாழ்த்தை வந்தவர்களை வெறும் கையுடன் அனுப்பிவிடக்கூடாது என்பதற்காக சுப நிகழ்வுகளில்ல் தாம்பூல பை வழங்கப்படுகிறது. இன்றளவும் வீடுகளுக்கு வரும் உறவினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி அனுப்பும் வழக்கம் பல வீடுகளில் காணமுடியும். இந்த சூழலில் கோவையை சேர்ந்த பாரதி-ஸ்ரீஜா ஆகியோரது திருமணம் சரவணம்பட்டி அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கலாச்சார முறைப்படி திருமண நிகழ்வை நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இருந்த இவர்கள் தங்களது திருமணத்தில் தாம்பூல பைகளுக்கு பதிலாக சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தாம்பூல பைக்கு பதிலாக கருப்பு கவுனி லட்டு, திணை லட்டு, பாசிபயிறு லட்டு, கேழ்வரகு லட்டு, நரிப்பயிறு லட்டு, கம்பு லட்டு மற்றும் கடலை உருண்டை என ஏழு வகை சிறுதானிய லட்டுகளை தாம்பூலமாக வழங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், சிறுதானிய ஆண்டை குறிப்பிடும் விதமாகவும், ஆரோக்கியதை பேணும் வகையிலும் இந்த திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானியங்களால் செய்யப்பட்ட லட்டுகள் வழங்கப்பட்டதாக திருமண வீட்டார் தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News