ஹோம் /கோயம்புத்தூர் /

தூய்மையான நகரங்கள் பட்டியலில் சென்னை, மதுரையை பின்னுக்குத்தள்ளிய கோவை.. என்னென்ன காரணங்கள்.. Detailed Report

தூய்மையான நகரங்கள் பட்டியலில் சென்னை, மதுரையை பின்னுக்குத்தள்ளிய கோவை.. என்னென்ன காரணங்கள்.. Detailed Report

தூய்மையான

தூய்மையான நகரங்கள் பட்டியலில் கோவை..

Coimbatore on Clean Cities List | நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் சென்னை, பெங்களூரு, மதுரை நகரங்களை பின்னுக்குத்தள்ளி கோவை 42வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. நடப்பு ஆண்டிலும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு, தூய்மையான நகரங்களுக்கு ஜனாதிபதி கையால் விருது வழங்கப்பட்டுள்ளது.  இதில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர்  நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாகவே இந்தூர் நகரம் தான் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்தூருக்கு அடுத்தபடியாக தூய்மையான நகரங்கள் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிராவின் நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்குள் நடக்கும் போட்டி தான் இது. இது தவிர மக்கள் தொகை குறைவாக இருக்கும் நகரங்களுக்கு தனியே தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

மேலும் படிக்க:  வால்பாறைக்கு சுற்றுலா போறீங்களா? உஷார்... வனத்துறை எச்சரிக்கை.!

இந்த தூய்மையான நகரங்கள் பட்டியலில் நம்ம கோவை நாட்டிலேயே 42வது இடத்தை பிடித்துள்ளது. நமக்குப் பிறகு பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. கடைசி இடத்தை மதுரை பிடித்துள்ளது.

மொத்தம் 45 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து மூன்றே நகரங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் என்ன ஸ்பெஷல்?

தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று நகரங்களில் முதலாவது நகரமாக கோவை இருக்கிறது. ஸ்வச் சர்வேக்சான் குழுவினர் கோவை வந்து இங்குள்ள உட்கட்டமைப்புகள், சாலை வசதிகள், கழிவறை, தூய்மை, தினசரி நகரை தூய்மைப்படுத்துதல், நீர் நிலைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அதன் புகைப்படங்களையும், அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா? 

அறிக்கை விவரம் :

குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதில் கோவை 75ல் இருந்து 90 சதவீதம் பூர்த்தி செய்துள்ளது. சாலைகளை சுத்தமாக பராமரிப்பதில் 90 சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்துள்ளது.

பொது கழிப்ப்றைகளை தூய்மையாக பராமரிப்பதில் 25ல் இருந்து 50 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்துள்ளது கோவை. நகரை அழகாக்குவதில் 75 முதல் 90 சதவீதமும், சந்தை பகுதிகளை தூய்மையாக பராமரிப்பதில் 90 சதவீதத்திற்கு மேலும், குடியிருப்பு பகுதிகளின் தூய்மையில் 90 சதவீதத்திற்கு மேலும், கழிவு நீர் வடிகால் வசதியில் 75 முதல் 90 சதவீதமும், நீர் நிலைகள் பராமரிப்பில் 90 சதவீதத்திற்கு மேலும் கோவை பூர்த்தி செய்துள்ளது.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

மேலும், குடியிருப்பு பகுதிகளை தினமும் தூய்மைப்படுத்துவதில் 90 சதவீதத்திற்கு மேலும், நகரப்பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் அமைத்தலில் 90 சதவீதத்திற்கு மேலும், மக்கள் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதில் 50 முதல் 75 சதவீதமும் கோவை பூர்த்தி செய்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தரவுகளை முறையாக ஆய்வு செய்து, குறைகளை களைந்தால் கோவை அடுத்தடுத்த ஆண்டுகளில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்திற்கு வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News