Home /coimbatore /

6 மாதங்களில் 4,400 பேருக்கு நாய்க்கடி.. துரத்தும் தெரு நாய்களால் அலறும் கோவை மக்கள்..

6 மாதங்களில் 4,400 பேருக்கு நாய்க்கடி.. துரத்தும் தெரு நாய்களால் அலறும் கோவை மக்கள்..

கோவையில்

கோவையில் அலறும் தெருநாய்கள்..

Coimbatore Latest News : கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையில் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் 4,400 பேர் நாய்க்கடிக்கான சிகிச்சை பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கோவை மாநகரில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மாநகராட்சியினரால் பிடிக்கப்பட்டு ஒண்டிப்புதூர் மற்றும் உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த நாய்கள் கருத்தடை மையத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் நாய்கள் பிடித்த பகுதியிலேயே கொண்டு சென்று விடப்பட்டு வந்தன.

மேலும், சில தன்னார்வ அமைப்புகளும் மாநகராட்சி வழங்கும் ஊக்கத்தொகை அடிப்படையில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டன. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்தடை மையம் செயல்படாமல் உள்ளது.  மேலும், தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையும் நிறுத்தப்பட்டதால் அந்த தரப்பில் இருந்தும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் முறை தடைபட்டது.

கோவையில் தெருநாய்கள் தொல்லை..


இதனிடையே கோவையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலைகளில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் நாய்கள் இரவுப் பணி முடிந்து வீடு திரும்புவோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்துகின்றன.

கோவையில் தெருநாய்கள் தொல்லை..


இதனால் பதட்டமடையும் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து வாகனங்களில் இருந்து கீழே விழுகின்றனர். பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் பொதுமக்களையும், குழந்தைகளையும் கடித்துவிடுகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையில் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் 4,400 பேர் நாய்க்கடிக்கான சிகிச்சை பெற்றுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனிடையே தெருநாய்களை கணக் கெடுப்பதாக கடந்த மே மாதமே மாநகராட்சி தரப்பு அறிவித்தது. ஆனால், முழு வீச்சில் இந்த பணிகள் நடைபெறவில்லை என்றும், தெரு நாய்களை கணக்கெடுத்து முடித்து அவற்றை பிடித்து கருத்தடை செய்வதற்குள் தெரு நாய்கள் கூட்டம் பன்மடங்காகப் பெருகி "கடி " வாங்கும் சூழல் தான் அதிகமாவதாக கோவை மக்கள் குமுறு வருகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி