ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் நாளை மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி ஆரம்பம்

கோவையில் நாளை மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி ஆரம்பம்

வலு தூக்கும் போட்டி

வலு தூக்கும் போட்டி

Coimbatore District News | கோவையில் மாநில அளவிலான கல்லூரி, பள்ளி இடையே படிக்கும் மாணவிகளுக்கு வலுதூக்கும் போட்டி, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் மாநில அளவிலான கல்லூரி, பள்ளி இடையே படிக்கும் மாணவிகளுக்கு வலுதூக்கும் போட்டி, நாளையும் (5ம் தேதி) நாளை மறுநாள் (6ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளை கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கமும், கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டிகள் தமிழ்நாடு அளவிலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்க கூடிய மாணவ- மாணவிகளுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டிகள் கோவை அரசூரில் அமைந்துள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நாளை (5-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடக்கின்றன.

Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

தமிழகம் முழுவதும் இருந்து 54 கல்லூரிகள், 45 பள்ளிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் கல்லூரி, பள்ளிக்கு சாம்பியன் பட்டமும், மாணவ- மாணவிகளுக்கு பதக்கம், கே.பி.ஆர். வலுதூக்கும் சுழல் கேடயமும் வழங்கப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தகவலை தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் செயலாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Local News