Home /coimbatore /

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி.. தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள்..

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி.. தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள்..

கோவையில்

கோவையில் மாநில அளவிலான கராத்தே போட்டி

State Level Open Karate Championship at Coimbatore : மாநில அளவிலான தமிழ்நாடு ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரி உள் விளையாட்டு அரங்கில்இரண்டு நாட்கள் நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த 900 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அசத்தியுள்ளனர்.

-இந்த போட்டியில் கோவை, ஈரோடு,திருப்பூர், நீலகிரி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த போட்டியை பி.எஸ்.ஜி.குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இதில், ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 5 வயது முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு அசத்தினர்.

இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் இவர்கள் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Karate, Local News

அடுத்த செய்தி