முகப்பு /கோயம்புத்தூர் /

தனியாரை போல் அரசுப் பள்ளி, கல்லூரிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் - கோவையில் பெண்கள் மனு

தனியாரை போல் அரசுப் பள்ளி, கல்லூரிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் - கோவையில் பெண்கள் மனு

X
வுமன்

வுமன் இந்தியா மூமெண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள்

Coimbatore News : தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைப் போல் தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வுமன் இந்தியா மூமெண்ட் அமைப்பைச் சேர்ந்தவர் பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வுமன் இந்தியா மூமெண்ட் அமைப்பைச் (Women India movement) சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து அந்த அமைப்பின் கோவை மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் சாஜிதா கூறியதாவது, “தனியார் பள்ளிகளில் கல்வியின் தரம் அதிகமாக உள்ளதால் தான் மக்கள் தனியார் பள்ளி, கல்லூரிகளை நாடிச் செல்கின்றனர். இதில் சில பள்ளி கல்லூரிகளில் ஆண்டுதோறும் கல்விக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. நடுத்தர மக்கள் அதிக கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

வுமன் இந்தியா மூமெண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள்

கல்விக்கட்டணத்திற்காக நகைகளை அடகு வைக்கும் சூழல் உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசு எனவே தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், அரசு கல்லூரிகளிலும் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் கல்விக் கட்டண சுமைகளில் இருந்து விடுபடுவார்கள்.

தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்புகள், பாடத்திட்டங்கள் அதிகமாக உள்ளன. அரசு கல்லூரிகளில் இந்த வசதி இல்லை. குறிப்பிட்ட பட்டப்படிப்பு அரசு கல்லூரிகளில் இல்லாததால் தனியார் கல்லூரிகள் நாடிச் செல்ல வேண்டி உள்ளது. ஏழை மக்களின் கல்வித்தரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Coimbatore, Local News