முகப்பு /கோயம்புத்தூர் /

கண்ணைக்கவரும் அசத்தலான கலைப்பொருட்கள்.. கோவை பூம்புகாரில் என்னவெல்லாம் கிடைக்குது?

கண்ணைக்கவரும் அசத்தலான கலைப்பொருட்கள்.. கோவை பூம்புகாரில் என்னவெல்லாம் கிடைக்குது?

X
கோவை

கோவை பூம்புகார்

Coimbatore Poompuhar | கோவை கோனியம்மன் கோவிலுக்கு எதிரே மணிக்கூண்டின் பின்புறம் அமைந்துள்ளது பூம்புகார் விற்பனை நிலையம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கோனியம்மன் கோவிலுக்கு எதிரே மணிக்கூண்டின் பின்புறம் அமைந்துள்ளது பூம்புகார் விற்பனை நிலையம். அரசு நிறுவனமானது இந்த விற்பனை நிலையம் கடந்த 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பூம்புகார் என்றாலே அழகிய பொருட்கள் நிறைந்து கிடக்கும் இடம் என்று மக்கள் பலருக்கும் தெரியும். இங்கு கைவினை கலைஞர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் பூம்புகார் நிர்வாகமே தயாரிக்கும் கைவினைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கருங்கல், செம்பு, பித்தளை, பஞ்சலோகத்தால் தயாரிக்கப்பட்ட சாமி சிலைகள், மரத்தினால் செய்யப்பட்ட சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தாம்பூலம், மலைவாழ் மக்கள் தயாரித்த கைப்பைகள், கலைப்பொருட்கள், மரத்தினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதூர்த்தி, நவராத்திரி பண்டிகையின்போது விநாயகர் சிலைகள் மற்றும் நவராத்திரிக்கான கொலு பொம்மைகள் 10 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து பூம்புகார் விற்பனை நிலையத்தின் பிரதிநிதி தீபா கூறுகையில், "கைவினைக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சாமி சிலைகள், படங்கள், கைப்பைகள், மாலைகள், மரகதக்கல் சிலைகள் என பல்வேறு வகையான அழகிய பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் இந்த பொருட்கள் தேர்வு செய்து விற்பனை செய்கிறோம்" என்றார்.

First published:

Tags: Coimbatore, Local News