ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை வழியாக அசாமுக்கு சிறப்பு ரயில் - பயண அட்டவணை விவரம்

கோவை வழியாக அசாமுக்கு சிறப்பு ரயில் - பயண அட்டவணை விவரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Coimbatore News | கோயம்புத்தூர் வழியாக கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் வழியாக கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் அடுத்தடுத்து தொடர் பண்டிகைகள் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக, இம்மாதம் (நவம்பர்) 6, 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து கோவை வழியாக அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, கன்னியாகுமரியில் இருந்து ஞாயிறு (6ஆம் தேதி) மாலை, 5:20 மணிக்கு புறப்படும் ரயில் (வ.எண்:05905), புதன்கிழமை இரவு 8:50க்கு திப்ருகர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், இச்சிறப்பு ரயில் வரும் செவ்வாய் கிழமைகளில், திப்ருகரில் இருந்து இரவு, 7:25க்கு புறப்படும் ரயில்(05906) வெள்ளி இரவு 10:00க்கு கன்னியாகுமரி சென்றடையும். இந்த ரயிலில், ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி ஒன்று, மூன்றடுக்கு பெட்டிகள் 5, படுக்கை வசதி பெட்டிகள் 11, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 3, சரக்கு பெட்டி ஒன்று என மொத்தம் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

Must Read :கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

இந்த கன்னியாகுமரி-திப்ருகர் ரயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட ஸ்டேஷன்கள் வழியாக இயக்கப்படும். அதன்படி இந்த ரயில் திங்கள் காலை, 4:12க்கு கோவை ரயில் நிலையத்திற்கும், காலை, 5:03 மணிக்கு திருப்பூர் ரயில்நிலையத்திற்கும் வந்து செல்லும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், மறு மார்க்கத்தில் திப்ருகர்-கன்னியாகுமரி ரயில் வெள்ளி அன்று திருப்பூருக்கு காலை 9:43 மணிக்கும், கோவைக்கு காலை, 10:42 மணிக்கும் வந்து செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Local News, Special trains