Home /coimbatore /

கோவையில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம்..

கோவையில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம்..

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

Coimbatore District News : கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நாளை (ஜூலை 26 - செவ்வாய்) ) மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடக்கிறது. 

    கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நாளை (ஜூலை 26 - செவ்வாய்) மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்  நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் இருக்கும் மாற்று திறனாளிகளின் பிரச்னைகள் மற்றும் குறைகளையும் சரி செய்யும் விதமாக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்., சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய் கிழமை ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநகர் முன்னிலையில் முகாம் நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நாளை (செவ்வாய்) காலை 11 மணிக்கு நடக்கிறது.

    இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் மற்றும்  பணிபுரிய விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு குறைகள் ஏதாவது இருந்தால், இம்முகாமில் தெரிவித்துத்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: ராஜீவ்காந்த்
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி