Home /coimbatore /

சவுரிபாளையம் - மசக்காளிபாளையம் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு.. கோவை மாநகராட்சி கவனிக்குமா?

சவுரிபாளையம் - மசக்காளிபாளையம் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு.. கோவை மாநகராட்சி கவனிக்குமா?

குப்பைகளால்

குப்பைகளால் சுகாதாரக் கேடு.. கோவை மாநகராட்சி கவனிக்குமா?

Coimbatore District News : கோவையில் சவுரிபாளையம் பகுதியில் இருந்து மசக்காளிபாளையம் செல்லும் பிரதான சாலை வழியாக சென்று ஃபன் மால் திட்ட சாலையை அடைய முடியும் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த  சாலையின் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை சவுரிபாளையம் பகுதியில் இருந்து மசக்காளிபாளையம் செல்லும் சாலையில் குப்பைகள் சாலையில் கொட்டப்பட்டு நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சவுரிபாளையம் பகுதியில் இருந்து மசக்காளிபாளையம் செல்லும் பிரதான சாலை வழியாக சென்று ஃபன் மால் திட்ட சாலையை அடைய முடியும் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த  சாலையின் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இப்படி கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதும் இல்லை.   இதனால், குப்பைகள் காற்றில் பறந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும், குறுகலான இந்த சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், கோவையில் கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்து வருவதால் குப்பைகள் மழையில் நனைந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே குப்பைகள் உடனடியாக அப்புறப்படுத்துவதோடும், சாலை ஓரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டிகளை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி