இந்தியாவில் தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்வு, போர்ச்சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறியதாவது: தங்கம் விலை இந்தியாவில் நிர்ணயிக்கப்படுவதில்லை. சுவிட்சர்லாந்தில் உள்ள தங்க சுரங்கங்களின் உரிமையாளர்கள் தான் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றனர். இரண்டாவதாக அமெரிக்க டாலருக்கு எதிராக அந்தந்த நாடுகளில் உள்ள பணத்தின் மதிப்பு குறைவதாலும் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய நாணத்தின் மதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இதனால் அதிக இந்திய நாணயத்தை கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டியுள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதே இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய் இருந்திருந்தால் தங்கத்தின் மதிப்பு தற்போது பவுனுக்கு 1500 ரூபாய் குறைவாக இருந்திருக்கும்.
தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்றும், இந்தாண்டுக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயரும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வேலை இல்லா பிரச்சனை, ரஷ்யா-உக்ரைன் பிரச்சனை, சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று, அமெரிக்க வட்டி விகிதம் குறைப்பு, இந்திய பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறைந்தால் மட்டுமே தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.இன்றைய காலத்தில் தங்கத்தின் மீது முதலீடு செய்வதே சிறந்த முதலீடாக உள்ளது” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Gold, Local News, Tamil News