ஹோம் /கோயம்புத்தூர் /

வேற லெவல் ஆட்டம்- கோவை எஸ்.என்.ஆர் கல்லூரியில் ஆடிப் பாடி பொங்கல் கொண்டாடிய மாணவர்கள்

வேற லெவல் ஆட்டம்- கோவை எஸ்.என்.ஆர் கல்லூரியில் ஆடிப் பாடி பொங்கல் கொண்டாடிய மாணவர்கள்

X
பொங்கல்

பொங்கல் கொண்டாட்டம்

Coimbatore Pongal celebration | கோயம்புத்தூரிலுள்ள எஸ்.என்.ஆர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை எஸ்.என்.ஆர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஆடிப்பாடி பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழாவானது கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பொங்கல் வைத்து பாரம்பரிய நடனமாடி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.

அந்த வகையில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. கொரோனா காலத்திற்கு பிறகு முதன் முறையாக கொண்டாட்டம் நடைபெறுவதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

சேலையில் ஆட்டம்போடும் மாணவிகள் 

கல்லூரி வளாகத்தில் பொங்கல் பானைகள் வைத்து மாணவர்களே பொங்கல் தயார் செய்து சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினர்.

மாணவரின் பாரம்பரிய ஆட்டம்

பாண்டியாட்டம், நொண்டியாட்டம், உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன. மேலும் அரிசி குத்தல், அம்மி அரைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய சமையல் முறைகளையும் மாணவர்கள் செய்தனர். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், கும்மி ஆடினர்.

Pongal 2023 : பொங்கல் விழாவில் கும்மியாடி அசத்திய கோவை நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள்..

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மூலமாக நமது பாரம்பரியம் குறித்து தெரிந்து கொண்டோம். கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு நாங்கள் கல்லூரியில் கொண்டாடும் முதல் பொங்கல் என்பதால் உற்சாகமாக உள்ளோம்" என்றனர்.

செய்தியாளர்: சௌந்தர மோகன், கோயம்புத்தூர்.

First published:

Tags: Coimbatore, Local News, Pongal 2023