Home /coimbatore /

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் : கோவையில்  நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் : கோவையில்  நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

கோவை

கோவை - ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்..

Coimbatore Smart India Hackathon : கோவையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியானது அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 மாணவர் குழுக்களைச் சேர்ந்த 163 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்ற மாணவர்கள் மென்பொருள் தயாரிக்கும் இந்திய அளவிலான போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள் மத்தியில்  படைப்பாக் கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்ற மென்பொருள் வடிவமைப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த போட்டியானது அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்கள் மென்பொருள் பயன்பாட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் பணிகளை எளிதாக்கும் மென்பொருள் தயாரிக்கும் விதமாக நடத்தப்படுகிறது.

ஸ்மார்ட் ஹேக்கத்தான் 2022ன் இறுதிப் போட்டியானது 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 2,033 மாணவர் குழுக்கள் கலந்து கொண்டன.  கோவையில் இந்த போட்டியானது அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 மாணவர் குழுக்களைச் சேர்ந்த 163 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கான மென்பொருள் தயாரிப்பில் 6 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த இரண்டு நாட்களும் மாணவர்கள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு அதனை 26ம் தேதி சமர்ப்பித்தனர். இறுதியில் சிறந்த மென்பொருள் தயாரிக்கும் மாணவர் குழுவுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த இறுதிப் போட்டிகள் தொடக்க விழாவிற்கு கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில், கல்லூரின் முதல்வர் அகிலா தலைமை வகித்தார்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி