ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்.. மாநகராட்சி ஆணையர் திடீர் விசிட்

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்.. மாநகராட்சி ஆணையர் திடீர் விசிட்

மாநகரட்சி ஆணையர் ஆய்வு

மாநகரட்சி ஆணையர் ஆய்வு

Coimbatore news : கோவை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள 69-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, அவினாசிலிங்கம் கல்லூரி அருகில் பாரதிபார்க் இரண்டாவது வீதி பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Also Read: வீட்டில் சமைத்த உணவை ஆன்லைனில் விற்பனை செய்யும் இல்லத்தரசி.. கோவையில் சுவாரஸ்யம்!

பின்னர், அப்பகுதியில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பாரதிபார்க் பகுதியில் உணவு கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பயோகேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

பின்னர் மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலையின் ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை, தாமஸ்பார்க் சந்திப்பில் மீடியா டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தியதோடு பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் பாஸ்கர், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர்கள் புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்

First published:

Tags: Coimbatore, Local News, Tamil News