முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்.. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு..

கோவையில் சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்.. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு..

X
கோவையில்

கோவையில் சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்

Coimbatore walkathan : உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் கோவையில் நடைபெற்ற சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்  நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூரில் சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி நடைபெற்றது.

2023ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அரசு அறிவித்ததை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் சிறுதானியங்களின் நன்மையகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவையில் சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான்

அதன் ஒரு பகுதியாக கோவையில் உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெரியவர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : மதுரை மெட்ரோ ரயில் திட்டம்.. இறுதிகட்ட மண் பரிசோதனை பணிகள் தீவிரம்!

இந்த வாக்கத்தான் பயணத்தை மத்திய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கண்ணன், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய இந்த வாக்கத்தான் பாலசுந்தரம் சாலை வழியாக அவிநாசி சாலையை வந்தடைந்து மீண்டும் வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News