Home /coimbatore /

நீங்களும் பாடகராகலாம்... பாத்ரூம் சிங்கர்களை மேடை பாடகர்களாக மாற்றி வரும் கோவை நிறுவனம்..

நீங்களும் பாடகராகலாம்... பாத்ரூம் சிங்கர்களை மேடை பாடகர்களாக மாற்றி வரும் கோவை நிறுவனம்..

கோவை

கோவை

Coimbatore District News | வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களையும் பாடகர்களாக மாற்றி வருகிறது கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
பாடல்கள் பாடுவதில் ஆர்வமுடைய பல்வேறு துறை சார்ந்தவர்களுக்காக கோவையில் நடைபெற்ற பாடல் பயிற்சிப் பட்டறையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர் கலந்து கொண்டார்.

தற்போதைய வேகமான உலகில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் தங்களது மன அழுத்தங்களை போக்க தியானம்,யோகா,மற்றும் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த பாடல்களை பாடி தங்களது மனதிற்கு அமைதி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது போன்றவர்களுக்கும் முறையான பாடும் பயிற்சி அளித்து, அவர்களை திறமையான பாடகர்களாக மாற்றி அவர்கள் நிகழ்ச்சிகளில் பாட வைக்கிறது கோவையைச் சேர்ந்த 'ஸ்டுடியோ மியூசிக் அண்ட் மோர்' என்ற கோவையைச் சேர்ந்த நிறுவனம்.

இதையும் படிங்க:   1,000 பேருக்கு வேலை.. கோவை டைடல் பார்க்ல தொடங்கியாச்சு Quintessence நிறுவனம்..

தமிழகத்தில் முதன் முறையாக மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என வெவ்வேறு துறைகளில் பணி புரிபவர்களின் பாடல் பாடும் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக புதிய பாடல் பயிற்சி மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அசத்தியுள்ளனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பாடல்கள் பாடுவதில் உள்ள சின்ன சின்ன நுணுக்கங்களை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்து கூறினார்.

இதையும் படிங்க:  மேம்பாலம் இல்லாததால் திக்குமுக்காடும் சிங்காநல்லூர்..

இதில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உட்பட பல்வேறு துறையில் உள்ளவர்கள் கலந்து கொண்டு மேடையில் பாடல்களை பாடி அசத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,  "சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் தங்களது மன அழுத்தத்தை போக்கும் விதமாக பாடுவதை முறையாக பயிற்சி அளித்து அவர்களை நல்ல பாடகர்களாக மாற்றுகிறோம். " என்றனர்.

நீங்களும் பாடுவதற்கான பயிற்சி பெறு நினைத்தால் 98409 29292 என்ற எண்ணில் இந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்..
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி