Home /coimbatore /

தீஜ்ரி பண்டிகை கேள்விப்பட்டிருக்கீங்களா? மணப்பெண் போல் உடையணிந்து ஒய்யார நடை போட்ட சிந்தி சமூக பெண்கள்..

தீஜ்ரி பண்டிகை கேள்விப்பட்டிருக்கீங்களா? மணப்பெண் போல் உடையணிந்து ஒய்யார நடை போட்ட சிந்தி சமூக பெண்கள்..

தீஜ்ரி

தீஜ்ரி பண்டிகை

Coimbatore Latest News : அனைத்து சமூக மக்களும் வசித்து வரும் கோவையில், சில குடும்பங்களை மட்டுமே கொண்டுள்ள சிந்தி சமூகத்தின் பெண்கள் இணைந்து சிந்தி லேடீஸ் ஃபாரம் எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தீஜ்ரி பண்டிகையையொட்டி கோவையில் நடைபெற்ற விழாவில் திருமணமான 'சிந்தி' சமூக பெண்கள் மணப்பெண் போல் உடையணிந்து ஒய்யார நடைபோட்டும் நடனம் ஆடியும் அசத்தினர்.

கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் தொழில் விருத்தி, செல்வ பெருக்கு உள்ளிட்ட நலன்களை வேண்டி தமிழகத்தில் பெண்கள் நோன்பு கடைபிடித்து கொண்டாடப்படும் வரலட்சுமி விரதத்தை போலவே சிந்தி சமூக பெண்கள் தீஜ்ரி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

அனைத்து சமூக மக்களும் வசித்து வரும் கோவையில், சில குடும்பங்களை மட்டுமே கொண்டுள்ள சிந்தி சமூகத்தின் பெண்கள் இணைந்து சிந்தி லேடீஸ் ஃபாரம் எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்.

சிந்தி சமூக பெண்கள்


இந்நிலையில் சிந்தி சமூக மக்களின் தீஜ்ரி பண்டிகை விழா கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

சிந்தி சமூக பெண்கள்


இதில் திருமணமான பெண்களுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமணமான சிந்தி சமூக பெண்கள் மணப்பெண் போல் உடை அணிந்து மேடையில் நடனமாடியும் ஒய்யார நடை நடந்தும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 30 வயது முதல் 58 வயது வரை உள்ள பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் அவர்களுக்கு கைகளில் மருதாணி அணிதல், வெவ்வேறு விளையாட்டுகள், போட்டிகள் நடத்தப்பட்டன.

சிந்தி சமூக பெண்கள்


இந்த தீஜ்ரி பண்டிகையில் சிந்தி சமூக பெண்கள் நாள் முழுக்க விரதம் இருந்து இரவில் சந்திரனுக்கு அர்ச்சனை செய்து நோன்பை முடிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி