முகப்பு /கோயம்புத்தூர் /

கொத்தடிமை முறையை எதிர்த்து கோவையில் கையெழுத்து இயக்கம்

கொத்தடிமை முறையை எதிர்த்து கோவையில் கையெழுத்து இயக்கம்

X
கொத்தடிமை

கொத்தடிமை முறையை எதிர்த்து கோவையில் கையெழுத்து இயக்கம்

Coimbatore Today News : கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக பயன்படுத்துவதும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துவதும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் கொத்தடிமை முறை எதிர்ப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள், ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுத்து இதற்கென ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகையில் தங்களது கையெழுத்தை இட்டு கொத்தடிமை முறை எதிர்ப்பு தின உறுதிமொழியேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Coimbatore, Local News