முகப்பு /கோயம்புத்தூர் /

இனி சிக்னல்களுக்கு டாட்டா.. கோவையில் வந்த ரவுண்டானாவால் மக்கள் குஷி!

இனி சிக்னல்களுக்கு டாட்டா.. கோவையில் வந்த ரவுண்டானாவால் மக்கள் குஷி!

X
கோவை

கோவை ரவுண்டானா

Coimbatore roundana | கோவை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானாவை அமைத்து வருகின்றனர் கோவை மாநகர போலீசார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டு அங்கு ரவுண்டானா அமைக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரான கோவையில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாநகரில் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானாவை அமைத்து வருகின்றனர் கோவை மாநகர போலீசார்.

மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் இந்த பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தடாகம் சாலையில் லாலி ரோடு சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சந்திப்பு மற்றும் ப்ரூக் பாண்ட் சாலையில் கிக்கானி சந்திப்பு பகுதிகளில் இருந்த போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டு அங்கு சோதனை முறையில் ரவுண்டானா அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சுலபமாக சென்று வருகின்றன. இதனால் இந்த மூன்று இடங்களிலும் வாகன நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது.

இதில் ப்ரூக் பாண்ட் சாலையில் கிக்கானி சந்திப்பு பகுதியில் தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ரவுண்டானா அமைத்து அங்கு தீவுத்திடல் அமைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரவுண்டானா காரணமாக போக்குவரத்து சுலபமாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News, Traffic