ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் பாடகர் சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி.. எப்போது தெரியுமா? விவரம் இதோ..!

கோவையில் பாடகர் சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி.. எப்போது தெரியுமா? விவரம் இதோ..!

கோவையில்

கோவையில் பாடகர் சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி

Coimbatore News | இசைக்கச்சேரிக்காக வெளிநாடுகளில் இருந்து சவுண்ட் சிஸ்டம் வரவழைக்கப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி கோவையில் வரும் 27ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இசைக்கச்சேரி 27ம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் துவங்கி சுமார் 3 மணி நேரம் நடைபெற உள்ளது.

சித் ஸ்ரீராமுடன் அவரின் இசைக்குழுவைச் சேர்ந்த 9 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த குழுவினர் பிரபல இசைக்கலைஞர்களுடன் பணிபுரிந்தவர்கள். ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரத்திற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட உள்ளது.

இந்த கச்சேரியில் மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி, ஆடும் வகையில் 'பேன் பிட்' இடம்பெறுகிறது. இங்கு 10 ஆயிரம் பேர் வரை நிற்க முடியும். இவர்களுடன் சித் ஸ்ரீராமின் உரையாடல் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மாணவியை வன்கொடுமை செய்த தயாரிப்பாளர் - பொள்ளாச்சியில் மீண்டும் பகீர் சம்பவம்!

இந்த இசைக்கச்சேரிக்கான டிக்கெட் அறிமுகம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து இசைக்கச்சேரிக்கான டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தினர்.

இசைக்கச்சேரிக்கான டிக்கெட்டுகள் பேடிஎம், புக் மை ஷோ உள்ளிட்ட செயலிகளிலும், தனியார் உணவகங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சித் ஸ்ரீராம் குழுவைச் சேர்ந்த சசிக்குமார் கூறுகையில், "30 ஆயிரம் பேர் வரை இந்த இசைக்கச்சேரியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். சித் ஸ்ரீ ராம் தொடர்ந்து 3 மணி நேரம் பாட உள்ளார். தமிழ், தெலுங்கு பாடல்கள் இதில் இடம் பெறும்.

அவர் பாடிய பாடல்கள் மட்டுமல்லாது இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களையும் பாட உள்ளார். இசைக்கச்சேரிக்காக வெளிநாடுகளில் இருந்து சவுண்ட் சிஸ்டம் வரவழைக்கப்பட உள்ளது. முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த கச்சேரி நடைபெற உள்ளது" என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்களுக்கு இசைக்கச்சேரிக்கான டிக்கெட் வேண்டுமா? பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்: 0422 3501888, 9787100711,9787800711.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News