Home /coimbatore /

பரம்பிக்குளம் அணையில் உடைந்தது ஷட்டர்.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

பரம்பிக்குளம் அணையில் உடைந்தது ஷட்டர்.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

கோவை

கோவை - பரம்பிக்குளம் அணை

Coimbatore Parambikulam Dam | கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பரம்பிக்குளம் அணையில் ஷட்டர் உடைந்தது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் ஒரு ஷட்டர் கழன்று விழுந்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் காமராஜர் கட்டிய அணைகளில் ஒன்று பரம்பிக்குளம் அணை. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் மழை நீர், சோலையார் அணைக்கு வந்து, அங்கிருந்து உபரி நீராக பரம்பிக்குளம் அணை வந்து சேர்கிறது.

மொத்தம் 71 கன அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் செய்யும்பொழுது அந்த நீர் கேரள மாநிலம் சாலக்குடி வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கிறது.

பரம்பிக்குளம் அணை


இதனிடையே கடந்த செப். 20ம் தேதி இரவு 10 மணி அளவில் பரம்பிக்குளம் அணையில் உள்ள மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஒரு ஷட்டர் கழன்று விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  கோவை - சேலம் வழித் தடத்தில் இந்த ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து- ஏன் தெரியுமா?

இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாலக்காடு மாவட்ட கலெக்டர் முனராய் ஜோஷி மற்றும் தமிழக, கேரளா பொதுப் பணித்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அணையிலிருந்து வெளியேறி வரும் நீரை கட்டுப்படுத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணையில் இருந்து வெளியேறும் நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Pollachi

அடுத்த செய்தி