முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / சின்னத்திரை நடிகையின் கொடூர செயல்..! நடிக்க கூடாது என கண்டித்த கணவரை ஆண் நண்பர் மூலம் கத்தியால் குத்திய பயங்கரம்

சின்னத்திரை நடிகையின் கொடூர செயல்..! நடிக்க கூடாது என கண்டித்த கணவரை ஆண் நண்பர் மூலம் கத்தியால் குத்திய பயங்கரம்

கைதான ரம்யா - டேனியல் சந்திரசேகர்

கைதான ரம்யா - டேனியல் சந்திரசேகர்

ரம்யா மீது சந்தேகம் அடைந்த போலீசார் ரம்யாவை விசாரணை மேற்கொண்டதில், ரம்யாவுடன் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகர் டேனியல் சந்திரசேகர் என்பவரை வைத்து கணவரை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சி அருகே சின்னத்திரையில் நடிக்கக் கூடாது என கூறிய கணவனை ஆண் நண்பரை வைத்து கத்தியால் குத்தி தாக்கிய வழக்கில் சின்னத்திரை துணை நடிகை, மற்றும் ஆண் நண்பரான நடிகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லிக் கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி ரம்யா (30). ரமேஷ் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். ரமேஷ்க்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் மது அருந்திவிட்டு ரம்யாவை அடித்து துன்புறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக ரம்யா கோவையில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்ற ரம்யா சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். அவ்வப்போது பொள்ளாச்சி நல்லி கவுண்டம்பாளையம் கணவர் வீட்டிற்கு ரம்யா வந்து செல்வது வழக்கம்.

இதையும் படிக்க :  ஒருதலைக் காதலால் விபரீதம்... இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞருக்கு போலீசார் வலை..!

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு கணவர் ரமேஷ் மற்றும் ரம்யா இருசக்கர வாகனத்தில் நல்லி கவுண்டன் பாளையம் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வழி மறித்த நபர் ரமேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தச் சம்பவம் குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்..

அப்போது ரம்யா மீது சந்தேகம் அடைந்த போலீசார் ரம்யாவை விசாரணை மேற்கொண்டதில், ரம்யாவுடன் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகர் டேனியல் சந்திரசேகர் என்பவரை வைத்து கணவரை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது..

இதையும் படிக்க :  இன்ஸ்டாகிராம் மூலம் வலை... சொகுசு கார்... ரூ.20 லட்சம் மோசடி... ஆசைவார்த்தை கூறி தொழிலதிபரை ஏமாற்றிய இன்ஸ்டா ராணி...!

இது குறித்து போலீசார் கூறுகையில் சினிமாவில் நடித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது ரம்யாவின் ஆசை. ஆனால் கணவர் ரமேஷ் சின்னத்திரையில் நடிக்க வேண்டாம் என அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.

இதனால் ரம்யா உடன் நடிக்கும் துணை நடிகரான டேனியல் என்ற ஆண் நண்பரை வைத்து கணவரை கத்தியால் குத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ரம்யா மற்றும் அவரது ஆண் நண்பர் டேனியல் உள்ளிட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் : ம.சக்திவேல் (பொள்ளாச்சி)

First published:

Tags: Crime News, Pollachi, TV actress, TV Serial