ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் பண்ணையில் வளர்க்க ஆழியாறில் மீன் குஞ்சுகள் விற்பனை...

கோவை மாவட்டத்தில் பண்ணையில் வளர்க்க ஆழியாறில் மீன் குஞ்சுகள் விற்பனை...

மீன்குஞ்சுகள்

மீன்குஞ்சுகள்

Kovai District | கோவை ஆழியாறு மீன் வளர்ச்சி கழகத்தில், நுண் மீன் வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வரும் நிலையில், பண்ணை குட்டை, சிமெண்டு தொட்டியில் மீன்களை வளர்க்க விரும்புவோர் மீன் குஞ்சுளை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ஆழியாறு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் நுண் மீன் வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கே, மேட்டூர், மணிமுத்தாறு, பவானி போன்ற இருந்து நுண் மீன் குஞ்சுகள் வாங்கி வந்து வளர்க்கப்படுகிறது. இந்த நுண் மீன் குஞ்சிகளை விரலிகளாக மாற்றி 10 செ.மீ. நீளத்துக்கு வளர்க்கப்படுகிறது.

இதற்காக கடலை புண்ணாக்கு, நெல் தவிடு ஆகியவை மீன்களுக்கு உணவாக கொடுக்கப்படுகின்றன. மீன்கள் 10 செ.மீ. வளர்ந்ததும் ஆழியாறு உள்ளிட்ட அணைகளில் இருப்பு வைக்க வழங்கப்படுகிறது. அணையில் இருப்பு வைக்கப்படும் இந்த மீன் குஞ்சுகள் வளர்ந்த பின் அவை பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக ஆழியாறு அணை நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இந்த அணையில் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்க மீன் வளர்ச்சி கழகத்தினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, மீன் குஞ்சுகள் அணைக்குள் விடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : பொள்ளாச்சிக்கு மினி கோடம்பாக்கம்னு பெயர் வாங்கி தந்தது இந்த பங்களா தானா..!

இதுகுறித்து மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறுகையில், “மேட்டூர், பவானி, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் உள்ள தாய் மீன்கள் பண்ணையில் இருந்து மிர்கால், கட்லா, ரோகு ஆகிய நுண் மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்படுகின்றன. அதன்படி அவற்றை அணையில் இருப்பு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 1 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டுள்ளன. இவை வளர்ந்த பின்னர், 60 நாட்களுக்கு பிறகு ஒரு கிலோ எடையுடைய வளர்ந்த மீன்களை பிடித்து மீன் வளர்ச்சி துறை மூலமாக பொதுமக்களின் உணவு தேவைக்கு வினியோகம் செய்யப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், பருவகாலம் தொடங்கி இருப்பதால், மீன் குஞ்சுகள் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் மீன்களை வாங்கி கொள்ளலாம். விவசாய பண்ணை, பண்ணை குட்டை, சிமெண்ட் தொட்டியில் மீன்களை வளர்க்கலாம். ஒரு மீன் குஞ்சு 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் இங்குள்ள மீன் பண்ணையில் வாங்கி கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News