கோவை சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் இணைந்து சூரிய ஒளியில் இயக்கும் படகை தயாரித்துள்ளனர்.
குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரியில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல், சிவில் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் படித்து வரும் இரண்டு, மூன்று மற்றும் நான்காமாண்டு மாணவர்கள் 14 பேர் இணைந்து முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும் படகை தயாரித்துள்ளனர் .
இந்த படகில் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் செலவில் மாணவர்களின் 4 மாத உழைப்பில் தயாரான இந்த படகு புதிய வரலாறு படைக்க உள்ளது.
மொனோகோ நாட்டில் ஆண்டுதோறும் மாணவர்கள் தயாரிக்கு படகுகளை கொண்டு சர்வதேச அளவிலான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் எந்த படகும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், முதல் முறையாக இந்திய மாணவர்கள் தயாரித்த படகு மொனோகோ படகு போட்டியில் கலந்து கொள்கிறது.
இரவு பகல் பாராமல் உழைத்து படகை உருவாக்கியுள்ளதாகவும், இந்த போட்டியில் கலந்து கொள்வதே பெருமையாக உள்ளதாகவும் மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.