முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை அரசு மருத்துவமனையை புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

கோவை அரசு மருத்துவமனையை புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

X
துப்புரவு

துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

Coimbatore protest | அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக 700க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டு இவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையை பொறுத்தவரை மூன்று சிப்டு அடிப்படையில் இவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 412 ரூபாய் ஊதியம் வழங்கப்படு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதமே தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 721 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியானது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஒப்பந்த ஊழியர்கள் பலமுறை தனியார் நிறுவனத்திடம் இதுகுறித்து முறையிட்டும் பயனளிக்கவில்லை. இதனால், கடந்த மாதம் கோவை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ | கோவையில் பைக்கில் புகுந்த கட்டு விரியன் பாம்பு.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்...!

தனியார் நிறுவனத்தினர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் இன்றுவரை தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

தூய்மைப்பணியாளர்கள் நடத்தி வரும் இந்த காத்திருப்பு போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை பணிகள் தேக்கமடைந்துள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Govt hospital, Local News