ஹோம் /கோயம்புத்தூர் /

நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி.. கோவை சுங்கம் பகுதியில் தீவுத்திடல் அமைக்க நிதி ஒதுக்கீடு..

நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி.. கோவை சுங்கம் பகுதியில் தீவுத்திடல் அமைக்க நிதி ஒதுக்கீடு..

X
கோவை

கோவை

Coimbatore News : கோவையில் சென்டர்மீடியனாக மணல் மூட்டைகள்.. தீவுத்திடலுக்கு நிதி ஒதுக்கியும் மெத்தனம்..!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சுங்கம் பகுதியில் தீவுத்திடல் அமைக்க ரூ.90 லட்சம் ஒதுக்கியும், அங்கு தீவுத்திடல் அமைக்காமல் மணல் மூட்டைகளை அடுக்கி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது தேசிய நெடுஞ்சாலைத்துறை.

கோவை- திருச்சி சாலையில் ரெயின்போ முதல் அல்வேர்னியா பள்ளி வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்காக சுங்கம் பகுதியில் இருந்த ரவுண்டான இடிக்கப்பட்டது. பின்னர் மேம்பால பணிகள் நிறைவடைந்தது. அந்த வழியில் போக்குவரத்தும் இயக்கப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த பழைய சாலையும் புனரமைக்கப்பட்டு புதிய தார் சாலை போடப்பட்டது. ஆனால் இங்கு இடிக்கப்பட்ட ரவுண்டானா மட்டும் மீண்டும் கட்டப்படவில்லை

சுங்கம் பகுதியில் இருந்து உக்கடம், புலியகுளம் செல்லவும், திருச்சி சாலை மார்க்கமாக சிங்காநல்லூர், டவுன்ஹால் செல்லவும், ரெட்பீல்ஸ் சாலை மார்க்கமாக அவினாசி சாலை செல்லவும் இந்த ரவுண்டானா உதவியாக இருந்தது. இது இல்லாததால் பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்ல சிரமங்கள் ஏற்படுகிறது. எப்போதும் படு 'பிசியாக' செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் கூட அதிகரித்துவிட்டது.

இதையும் படிங்க : கோவையில் இருந்து 100 கி.மீ. சுற்றளவில் பார்க்க வேண்டிய பசுமையான சுற்றுலா தலங்கள்

தற்போது ரவுண்டான அகற்றப்பட்டதால் சுங்கம் பகுதியில் மணல் மூட்டைகள் சென்டர்மீடியனாக அடுக்கப்பட்டுள்ளன. இந்த மணல் மூட்டைகள் சரியாமல் தடுக்க கட்டைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவே வெவ்வேறு சாலைகளை பிரிக்கும் தடுப்புகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மணல் மூட்டைகளில் ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்களும் முறையாக ஒட்டப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகங்களுக்கு இந்த தடுப்புக்கள் இருப்பதே தெரிவதில்லை. மணல் மூட்டைகளில் உள்ள மணல் சாலையில் சிந்துவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் திரும்பும் போது சறுக்கி விழும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டியான கோவை மாநகராட்சியில் ரவுண்டான அல்லது தடுப்புகள் அமைப்பதற்கு கூட வழி இல்லையா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல் இந்த மணல் மூட்டை தடுப்புகளால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக விட்டதாக தெரிவிக்கின்றனர் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்.

இதுகுறித்து நியூஸ் 18 உள்ளூர் தளத்திலும் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக சுங்கம் பகுதியில் தீவுத்திடல் அமைக்க ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீவுத்திடலுக்கு மட்டுமல்லாமல் சர்வீஸ் சாலைக்கும் இந்த நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை தீவுத்திடல் அமைப்பதற்கு எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. இந்த பகுதியில் பெரிய விபத்து ஏற்படும் முன்னதாக மணல் மூட்டைகளை அகற்றி தீவுத்திடல் அமைத்து கோவையின் அழகை பாராமரிப்பதோடு, வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பை தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் : சவுந்தர் மோகன் - கோவை

First published:

Tags: Coimbatore, Local News