முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை ரயில் பயணிகளே உஷார்.. ஒரே மாதத்தில் ரூ.1.4 கோடி அபராதம்!

கோவை ரயில் பயணிகளே உஷார்.. ஒரே மாதத்தில் ரூ.1.4 கோடி அபராதம்!

X
மாதிரிபடம்

மாதிரிபடம்

Railway fine | கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சோதனையில் 10 ஆயிரத்து 47 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Coimbatore, India

சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளில் டிக்கெட் இல்லாமல் பயணம், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றின் மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 112 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய, சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழு உறுப்பினர்கள் ரயில் மற்றும் ரயில்வே வளாகங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

இதுபோன்ற சோதனைகளின் போது, டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர்.

அதன் படி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சோதனையில் 10 ஆயிரத்து 47 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததைக் கண்டறிந்து, அவர்கள் இடமிருந்து ரூ.79 லட்சத்து 45 ஆயிரத்து 455 அபராதமாக வசூல் செய்யப்பட்டது. அதே போல் 5069 பேர் முறைகேடான பயணங்கள் மேற்கொண்டது கண்டறியப்பட்டு, அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.24 லட்சத்து 85 ஆயிரத்து 769 வசூலிக்கப்பட்டது.

மேலும் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்லுதல் ஆகிவற்றில் 60 முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதற்கு அபராதமாக ரூ.25 ஆயிரத்து 888 வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புப் குழுவினர் அபராதமாக வசூலித்த மொத்தத் தொகை ரூ.1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 112 ஆகும்.

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News, Railway