முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / மது வாங்கினால் இனி கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும்... ஏன் தெரியுமா?... வெளிவந்த முக்கிய தகவல்..!

மது வாங்கினால் இனி கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும்... ஏன் தெரியுமா?... வெளிவந்த முக்கிய தகவல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

கோவையில் காலி மது பாட்டிலை திரும்பப்பெறும் திட்டம் மூலம் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Coimbatore, India

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த உத்திரவிட்டது.

இந்த திட்டம் நீலகிரியில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டத்தை பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பெறப்படும் எனவும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : கோவை - அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியை பயன்படுத்துங்க..

காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து பத்து ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களை , டாஸ்மாக் மதுபான கடைகளில் ஓப்படைத்து மாவட்டத்தின் வனப்பகுதிகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Alcohol, Coimbatore, Tasmac