முகப்பு /கோயம்புத்தூர் /

"சாலை பாதுகாப்பு முக்கியம்ங்க" வில்லுப்பாட்டு பாடிய மாணவிகள்!

"சாலை பாதுகாப்பு முக்கியம்ங்க" வில்லுப்பாட்டு பாடிய மாணவிகள்!

X
வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு பாடிய மாணவிகள்

Coimbatore News | கோவையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவிகள் வீதி நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு பாடி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவிகள் வீதி நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு பாடி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவை மாநகரில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு படை துவங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் உறுப்பினர்களாக இணைந்து பொதுமக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் கடந்த 2009 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு படை துவங்கப்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த சேர்ந்த மாணவிகள் கல்லூரியில் நுழைவு வாயில் முன்பு சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம் நடத்தினர்.

மேலும், வில்லுப்பாட்டுப்பாடியும் நடனமாடியும் வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

top videos

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் மேரி பேபியோலா, செயலர் ரூபி அலங்கார மேரி, சாலை பாதுகாப்பு படை அலுவலர் மகேஸ்வரி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News, Road Safety