Home /coimbatore /

பொள்ளாச்சி ஆழியாற்றில் பாய்ந்தோடும் வெள்ளம்: பொதுமக்களுக்கு குளிக்க தடை

பொள்ளாச்சி ஆழியாற்றில் பாய்ந்தோடும் வெள்ளம்: பொதுமக்களுக்கு குளிக்க தடை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆழியாற்றில் வெள்ளம் செல்வதன் காரணமாக பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India
    பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் யாரும் ஆழியாற்றில் குளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

    கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் நேற்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

    இதேபோல் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    ஆழியாறு அணையில் இருந்து நேற்று 3-வது நாளாக உபரிநீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,364 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,540 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    ஆழியாற்றில் தற்போது, வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக் கூடாது என்று வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், தண்ணீர் ஓடும் தரைப் பாலத்தை கடந்து செல்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி